உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

நெய்வேலி; நெய்வேலி அருகே கீழ் வடக்குத்து சேர்ந்தவர் மதிவதனன். 28; இவரது மொபைல் போன் தொலைந்து விட்டதால், நேற்று முன்தினம் டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுக்க வந்தார். போலீஸ் நிலையம் எதிரே உள்ள வீரமணி,26; என்பவரது வீட்டு முன்பு அமர்ந்து புகார் எழுதினார். அப்போது, மதிவதனனிடம் என் வீட்டருகே உனக்கு என்னடா வேலை என கேட்டு வீரமணி மிரட்டியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று இந்திரா நகர் பி - 2 மாற்றுக்குடியிருப்பு அருகே பைக்கில் வந்த மதிவதனனை வழிமறித்து, வீரமணி மற்றும் நண்பர்கள் வேல்முருகன் மகன் ஸ்ரீராம். 22; என்.ஜே.வி., நகர் மணி மகன் சூர்யா.22; இந்திரா நகர் ஹரிகிருஷ்ணன் மகன் ஆனந்த். 26; ஆகியோர் தாக்கினர். கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொறுப்பு) வழக்கு பதிந்து வீரமணி உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். தப்பியோட முயன்ற ரவுடி வீரமணி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை