மேலும் செய்திகள்
தனித்தனியே விபத்து: 2 பேர் பலி
25-Jul-2025
விருத்தாசலம் : வேப்பூர் அடுத்த காட்டுக்கொட்டாய், சிறுகரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனலட்சுமி, 45; இவர் நேற்று முன்தினம் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி, விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள மோகம்பரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தார். அப்போது, கூட்டநெரிசலை பயன்படுத்தி, அவரது பர்சில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த காளியப்பன் மனைவி மாரியம்மாள், 40; திண்டுக்கல், தர்மத்துப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் கருப்பசாமி, 19; முத்துமாரி, 25; ரஞ்சனி, 20, ஆகியோர் கூட்டு சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.
25-Jul-2025