உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடுகள் திருடிய 4 பேர் கைது

ஆடுகள் திருடிய 4 பேர் கைது

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பில் ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, கரைமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கடந்த சில நாட்களாக மர்ம கும்பல் திருடி சென்றது. கடந்த 2 நாட்களுக்கு முன் கரைமேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் ஆடுகளை மர்ம நபர்கள் பைக்கில் திருடிச் சென்றனர்.இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீசில் அவர் புகார் அளித்தார். டி.எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் மற்றும் சேத்தியாத்தோப்பு போலீசார் ஒருங்கிணைந்து ஆடு திருடும் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பின்னலுார்-ஆணைவாரி இடையே பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் நந்தீஸ்வரமங்கலம் ரோட்டுத் தெரு கோபால் மகன் வெங்கடேஷ்பாபு,29; வடலுார் பார்வதிபுரம் அஜிஷ் மகன் காசிம்,24; சேராக்குப்பம் ரயில்வே தெரு ஞானசேகரன் மகன் கிருஷ்ணகுமார்,22; வெய்யலுார் சாவடி தெரு செல்வராசு மகன் எழிலரசன்,21; என்பதும், சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி சந்தைகளிலும், கறிக்கடைகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது.போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை