உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயி பறிகொடுத்த 40 சவரன்

விவசாயி பறிகொடுத்த 40 சவரன்

விருத்தாசலம், : கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன், 68; விவசாயி. இவர், 16ம் தேதி மனைவி விசாலாட்சியுடன், சிதம்பரத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. சுப்புராயன் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை, 70,000 ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது.விருத்தாசலம் பொறுப்பு டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி