முன்விரோத தகராறு 5 பேர் கைது
பரங்கிப்பேட்டை : முன்விரோதம் காரணமாக தாய், மகனை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலையை சேர்ந்தவர் குமரவேல் மனைவி மலர், 38; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்திக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மலர் மற்றும் அவரது மகன் சுமனை, மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், காயமடைந்த மலர், சுமன் ஆகியோர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து மலர் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மூர்த்தி, 42; அவரது மனைவி சத்தியா,38; மகன் ஹரிஹகரன்,19; உறவினர்கள் கீழ்பெருமாத்துார் சந்திரசேகர்,21; மருதுார் ராஜதுரை,20; ஆகியோரை கைது செய்தனர்.