உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

5 துப்புரவு ஊழியர்கள் கார் மோதி காயம்

கடலுார்: கடலுார் அருகே சாலையோரம் அமர்ந்திருந்த துாய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.கடலுார் அடுத்த ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.புதுார் கிராமத்தில் நேற்று துாய்மைப்பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பகல் 12:30 மணிக்கு பணியை முடித்து விட்டு ஓய்வுக்காக சாலையோரமாக அமர்ந்திருந்தனர். அப்போது தென்னம்பாக்கத்தில் இருந்து ராமாபுரம் நோக்கி வந்த மாருதி செலிரியோ கார், சாலையோரம் அமர்ந்திருந்த துாய்மைப்பணியாளர்கள் மீது திடீரென மோதியது. இதில் வடக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி,41; விஜயா,45; சாத்தாங்குப்பம் ஆசையம்மாள்,60; கிருஷ்ணவேணி,59; தன வைரம்,50; , ஆகியோர் காயமடைந்தனர். உடன், அருகில் இருந்தவர்ள் காயமடைந்தவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஆசையம்மாள், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை