உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராவ் மனைவி கவிதா, 50; இவர், நேற்று காலை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக சின்னவடவாடி கிராம ஏரி க்கு ஓட்டிச் சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், கவிதாவிடம் பேச்சு கொடுத்தனர். அவரிடம் இருந்து மர்ம நபர்கள் தண்ணீர் கேட்டு, வாங்கி குடித்தனர். அப்போது மர்ம நபர்கள், அவரிடம் இருந்து 3 சவரன் செயின், 2 சவரன் தோடுகளை அறுத்துச் சென்றபடி தப்பியோடினர். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அதில், காதுகளில் இருந்து தோடுகளை அறுத்துச் சென்றதால், காயமடைந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடன், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். இது குறித்து மங்களம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை