உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 59 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது

59 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவர் கைது

விருத்தாசலம்; கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கூட்ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர்.அதில், அவர்கள், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கலியபெருமாள் மகன் பெரியசாமி, 43, வீரப்பன் மகன் காளிமுத்து, 35, வேட்டக்குடி முருகேசன் மகன் பிரகாஷ், 23, என்பதும், சாக்கு மூட்டையில் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரிந்தது.அவர்களிடம் இருந்து 59 குவாட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பெரியசாமி, காளிமுத்து, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி