உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு 6 பேர்மீது வழக்கு

முன்விரோத தகராறு 6 பேர்மீது வழக்கு

நடுவீரப்பட்டு: முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கிய, 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த வெ.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 25; அதே பகுதியை சேர்ந்தவர் சேகர். தீபாவளி அன்று வெடியை துாக்கி போட்டு சேகர் வெடிக்கும் போது அந்த வழியாக வந்த மணிகண்டன் மீது பட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் மணிகண்டன் நேற்று (நவ.,14) இரவு கட்டாரச்சாவடி–திருமாணிக்குழி சாலையில் பைக்கில் வரும் போது சேகர்,சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடையாளம் தெரியாத, 4 பேர், மணிகண்டனை வழிமறித்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சேகர்,சூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !