கோஷ்டி மோதல் 8 பேர் கைது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே முன்விரோத தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் நாகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 42; அதே பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக தாக்கிக் கொண்டனர். இதில், ஜோதிலட்சுமி, 34; சரஸ்வதி, 58; ராமமூர்த்தி, 50; விஜய், 24; சித்ரா, 52; செல்வி, 42; ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில், ரவிச்சந்திரன், 39; சந்தோஷ், 34; சுந்தர், 35; உத்திராபதி, 35; வேல்முருகன், 27; விஜய், 25; கண்ணன், 22; வாசுதேவன், 37; ஆகிய 8 பேர் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.