உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் 105 வயது மூதாட்டி காலமானார்

நெல்லிக்குப்பத்தில் 105 வயது மூதாட்டி காலமானார்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 105 வயது மூதாட்டி உடல்நலக் குறைவால் இறந்தார்நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் மனைவி கற்பகம்,105.இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இவருக்கு தேசிங்கு என்ற மகன் இருந்தார். அவரும் இறந்துவிட்டார் தேசிங்கின் மகன் கெஜேந்திரனுக்கு 65 வயதாகிறது.கற்பகத்துக்கு பச்சையம்மாள், செல்வி என்ற 2 மகள்கள் உள்ளனர்.இதில் பச்சையம்மாள் வான்பாக்கத்தில் கணவர் தனசேகருடன் வசித்து வருகிறார். கற்பகம் தனது மகள் பச்சையம்மாளுடன் வசித்து வந்தார். தற்போது 100 வயது கடந்து வாழ்வதே அதிசயமாக உள்ள நிலையில் 105 வயதுள்ள கற்பகம் தனது வேலையை தானே செய்துள்ளார்.மேலும் கடந்த வாரம் வரை குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த வேலைகளை செய்து தந்துள்ளார். நேற்று உடல்நலக் குறைவால் கற்பகம் இறந்தார். இறந்த கற்பகத்துக்கு 5 பேரன், பேத்திகளும் மற்றும் 11 கொள்ளுபேரன், கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.இறந்த மூதாட்டியின் உடலுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஏராளமன பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி