மேலும் செய்திகள்
கிராமிய அஞ்சல் சபை கூட்டம்
25-Aug-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அஞ்சலகங்களில் கையாடல் செய்தது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர் துணை அஞ்சலகம் மற்றும் கொசப்பள்ளம் கிளை அஞ்சலகங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விருத்தாசலம் அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளர் உமாபதி விசாரணை நடத்தினர்.அதில் இளையூர் துணை அஞ்சலகத்தில், ரூ.1.03 லட்சமும், கொசப் பள்ளம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 83 ஆயிரத்து 245 கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது. இருப்பினும், இருவரும் கையாடல் தொகையை திருப்பி செலுத்திவிட்டனர்.இதுகுறித்த புகார்களின்பேரில், இறையூர் துணை அஞ்சலக அதிகாரி ராமலிங்கம் மற்றும் கொசப்பள்ளம் கிளை அஞ்சலக அலுவலர் சுரேஷ் மீதும் பெண்ணாடம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Aug-2024