தண்டவாளத்தில் தலை வைத்து கட்டட தொழிலாளி தற்கொலை
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கட்டட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி எஸ்.பி., மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 27; கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர் குடிபோதைக்கு அடிமைானார்.இந்நிலையில், நேற்று அதிகாலை பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.