மேலும் செய்திகள்
கடலுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
23-Sep-2024
கடலுார்: 2026ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று பழனிச்சாமி முதல்வராவது உறுதி என, முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.கடலுார் வடக்கு மாவட்ட அ,தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் காசிநாதன், மீனவரணி தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி துணை செலயாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கி பேசுகையில், கடலுார், பண்ருட்டி தொகுதிகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 275 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் வெற்றி பெற்று பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி என, பேசினார்.கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வக்கீல் பாலகிருஷ்ணன், கந்தன், வெங்கட்ராமன், மருத்துவரணி சீனிவாசராஜா, அண்ணா தொழிற்சங்க பாலகிருஷ்ணன், வர்த்தக அணி வரதராஜன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், இலக்கிய அணி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கடலுார் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உழைத்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியை, முதல்வராக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
23-Sep-2024