உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சிக்கினார்

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சிக்கினார்

பரங்கிப்பேட்டை,:கடலுார் அடுத்த சின்னகாரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு தச்சன்பாளையம் கிராமத்தில் உள்ள தன் விவசாய நிலத்தை, உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.மனுவை பரிசீலித்த பரங்கிப்பேட்டை குறுவட்ட சர்வேயர் நிர்மலா என்பவர், வெங்கடேசனிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். வெங்கடேசன், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவிய பணத்தை, பெரியப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த சர்வேயர் நிர்மலாவிடம் வெங்கடேசன் நேற்று மாலை 3:30 மணிக்கு கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், பணத்தை வாங்கிய நிர்மலாவை, கையும் களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை