உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பின்தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்,19; இவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை தினமும் பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி