மேலும் செய்திகள்
படிக்கட்டிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு
10-Oct-2025
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பூனையை பிடிக்க சென்றவர் தவறி விழுந்து, இறந்தார். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி, 62; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி அவர் வீட்டிலிருந்த கோழியை பூனை ஒன்று, பிடிக்க முயன்றது. இதைப்பார்த்த பஞ்சமூர்த்தி, பூனையை பிடிக்க முயன்றார். அப் போது அவர் நிலை தடு மாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கழுத்தில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மர் மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
10-Oct-2025