உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு

திட்டக்குடி; திட்டக்குடி அருகே ஆடுகளுக்கு தழை வெட்ட ஆலமரத்தில் ஏறியவர் தவறி விழுந்து இறந்தார்.திட்டக்குடி அடுத்த செவ்வேரியை சேர்ந்தவர் ரவி, 60. இவர், நேற்று காலை 9:00 மணியளவில் இவரது வீட்டின் அருகே ஏரிக்கரையில் உள்ள ஆலமரத்தில் ஏறி, தனது ஆடுகளுக்கு தழை வெட்டினார். அப்போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ