உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிச்சயித்த பெண் மாயம் போலீஸ் விசாரணை 

நிச்சயித்த பெண் மாயம் போலீஸ் விசாரணை 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நிச்சயித்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசப்பன் மகள் மகாலட்சுமி, 29. இவருக்கு அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த 15ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மகாலட்சுமி இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மகாலட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ