ஆகாயத் தாமரை வளர்ந்து வீணாகும் குளம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் குளத்தில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் குளம் பாழாகிறது.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் கடலுார்-பண்ருட்டி சாலையையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. குளத்தில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து குளம் முழுதும் பரவியுள்ளது.இங்கிருந்து 1 கி.மீ., தூரத்தில் வரக்கால்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்த குளத்தை பல லட்சம் செலவில் துார்வாரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு பெய்த மழையில் குளம் நிரம்பி தற்போதைய கோடையிலும் தண்ணீர் நின்று அழகாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து குளத்தை துாய்மையாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்லவும் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால், காராமணிக்குப்பம் குளத்தை மட்டுமே துார்வார நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குளம் செடிகள் வளர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.