தாசில்தாரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
புவனகிரி: புவனகிரி தாசில்தாரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.புவனகிரி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பான எந்த கோப்புகளிலும் கையொப்பமிடாமல் புறக்கணிப்பதுடன், சங்க பொறுப்பாளர்களை அவமதித்த தாசில்தார் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்த போராட்டத்தில் சங்க மாநில செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.