உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; கடலுார் மாவட்ட தி.மு.க., முடிவு

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; கடலுார் மாவட்ட தி.மு.க., முடிவு

கடலுார்; கடலுார் வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடலுார் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. ஞானமுத்து தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.கூட்டத்தில், கடலுார் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், திராவிட மாடல் அரசினால் முடிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு திறப்பு விழாவில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை