உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்

கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்

கடலுார்: சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் திட்டக்குடி அடுத்த மா.புடையூரைச் சேர்ந்த தென்னரசு, 32, கள்ளக்குறிச்சி முருகேசன், 46, ஹசீரா பீவி, நல்லம்மாள் ஆகிய 4 பேர் அரசு அங்கீகாரம் பெறாமல் வேனில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவர் அகிலன், வேப்பூர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து தென்னரசு, முருகேசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், முருகேசன் மீது சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் 1 கருக்கலைப்பு வழக்கு உள்ளது. தென்னரசு, முருகன் ஆகியோரின் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை