உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரக்கு வாகனங்களில் பயணம் விருதையில் விபத்து அபாயம்

சரக்கு வாகனங்களில் பயணம் விருதையில் விபத்து அபாயம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பொது மக்கள் செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடாக இருப்பதால் சுற்றியுள்ள 125க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர். இதில், குக்கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே அரசு, தனியார் பஸ்கள் இயங்குவதால் மற்ற நேரங்களில் பஸ் வசதியின்றி மக்கள் சிரமமடைகின்றனர். இதனால் சரக்கு ஏற்றிச் செல்லும் டாடா ஏஸ் வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, ஆபத்தான முறையில் பயணிக்கும் அவலம் தொடர்கிறது. மேலும், இரங்கல் நிகழ்வுகளுக்கு டாடா ஏஸ் வேனில் செல்லும்போது பல்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. அதுபோல், அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் சரக்கு வாகனங்களில் பொது மக்கள் அழைத்து வரப்படுகின்றனர். சரக்கு வாகனங்களில் பயணிக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டால், ஒருவர் மீது ஒருவராக விழுந்து உயிர்சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர வேகத்தடைகளை கடக்கும்போது தடுமாறி கீழே விழுந்து காயடையும் அபாயம் உள்ளது. எனவே, விருத்தாசலம் பகுதியில் சரக்கு வாகனங்களில் பொது மக்களை அழைத்துச் செல்வதை தடுக்க வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை