உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்துக்கள் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்துக்கள் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

நடுவீரப்பட்டில் இருந்து சி.என்.பாளையம், பட்டீஸ்வரம், நெல்லித்தோப்பு, சாத்திப்பட்டு வழியாக பண்ருட்டி செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி அத்தியாவசிய தேவைக்கும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர். மேலும் செம்மண் குவாரிக்கு நுாற்றுகணக்கான லாரிகள் சென்று வருவதால் இந்த சாலை எப்போதும் பிசியாக காணப்படுகிறது. விவசாயிகள் இந்த சாலையையொட்டி அதிகளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எதிரில் வரும் வாகனங்களுக்கு கூட வழி விட்டு ஒதுங்க முடியாத அளவிற்கு சாலை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சாலை வழியாக பைக்கில் சென்றவர், எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாததால் ஆக்கிரமிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கண் துடைப்பிற்காக சாலையை அகலப்படுத்த கணக்கீடு பணி நடந்தது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இனியாவது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ