மேலும் செய்திகள்
கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
13-Apr-2025
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவ சாதனையாளர் தின விழா நடந்தது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்து, வாரிய தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். முதல்வர் ரமேஷ்பாபு, துணை முதல்வர் வாசுதேவன், நிர்வாக அலுவலர் சந்திரமவுளி முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் ஜி டெக் நிறுவனத்தலைவர் கார்த்திக், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 135 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கினார். கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை செயலாளர் விஜயகுமார், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கினார். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் புகழேந்தி, விளையாட்டு இயக்குனர் அருணகிரி ஆண்டறிக்கை வாசித்தார். வித்யா, ஹரிஹரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மின்னியல் துறைத்தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
13-Apr-2025