உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டியத்தில் சாதனை; மாணவிக்கு பாராட்டு 

நாட்டியத்தில் சாதனை; மாணவிக்கு பாராட்டு 

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளியில் நோபல் நாட்டியாஞ்சலி போட்டியில் 10 நிமிடங்கள் திருபுகழ் பாடலுக்கு இடைவிடாது ஆடி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.சிதம்பரம் ரியா நாட்டியாஞ்சலி வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் நடந்த உலக சாதனை நோபல் போட்டியில் எஸ்.டி.சீயோன் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி வெனிஷா பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு 10 நிமிடம் இடைவிடாது நாட்டியம் ஆடி சாதனை படைத்தார்.மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின், சார் பதிவாளர் மாலதி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.இதில் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை