உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு போட்டிகளில்  சாதித்தால்  கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை

விளையாட்டு போட்டிகளில்  சாதித்தால்  கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை

மந்தாரக்குப்பம் : விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக கூடைப்பந்து பயிற்சியாளர் வடிவேல்முருகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மையம் மற்றும் என்.எல்.சி. விளையாட்டு பள்ளி ஒருங்கிணைந்து நெய்வேலியில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி விடுதி சகல வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் தங்கி பயிற்சி மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் சாதித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு கல்லுாரி படிப்பு, வேலை வாய்ப்பிற்கு அரசு அதிக முன்னுரிமை வழங்கி வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா பொறியியல் கல்லுாரி வாயிலாக அதிக இடங்கள் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக அரசு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஓதுக்கீடு, ஸ்காலர்ஷிப், விருதுகள், ஊக்கத்தொகை, கல்வி உதவி தொகை மற்றும் பல்வேறு சலுகைகைள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி விளையாட்டு துறையில் மாணவர்கள் தமக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். விளையாட்டு துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி