உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேதமடைந்த கஸ்டம்ஸ் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

சேதமடைந்த கஸ்டம்ஸ் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

கடலுார்; கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுாரில் இருந்து பகண்டை வரை உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி மற்றும் விழுப்புரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விஸ்வநாதபுரம், வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் ஆற்றின் கரையை தாண்டி தண்ணீர் கஸ்டம்ஸ் சாலையில் புகுந்தது. இதனால், கஸ்டம்ஸ் சாலையில் ஆங்காங்கே தார் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.எனவே, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை