மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
25-Sep-2024
நெய்வேலி: நெய்வேலியில், அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.நெய்வேலி அண்ணா தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், பக்தரட்சகன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார்.கூட்டத்தில் விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் கமலக்கண்ணன், வடக்குத்து கோவிந்தராஜ், பாஷ்யம், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், வடலூர் நகர செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் ஆனந்த பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் .உமாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Sep-2024