உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.மேற்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூமாலை. கேசவன் முன்னிலை வகித்தார்.முன்னாள் அமைச்சர் மோகன், கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.இதில் அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாஜி எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், ஜெ.பேரவை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலாளர் குணசேகரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நகர அவைத்தலைவர் சின்னப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி