உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

குள்ளஞ்சாவடி, : அதிமுக., கடலுார் தெற்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்தது.ஒன்றிய செயலாளர் பாஷ்யம் தலைமை தாங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன், கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சிவசுப்ரமணியன், மாநில தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் பக்த ரட்சகன் பங்கேற்று பேசினர். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் உமாதேவன், மாவட்ட விவசாய அணி செயலாளர் லோகநாதன், அகரம் ஊராட்சி தலைவர் சீனுவாசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், வினோத், கமலக்கண்ணன், பேரூர் செயலாளர் ஆனந்தபாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ