விளம்பர செய்தி வாக்காளர் பட்டியல் பணி: தி.மு.க., ஆய்வு
கிள்ளை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை, மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, கடலுார் மாவட்ட முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் அடுத்த மீதிக்குடி ஊராட்சியில், வாக்காளர் திருத்த பணியை, கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணி விவரங்களை கேட்டறிந்தார். அவருடன், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், துணை செயலாளர் சதா இளவரசு, முன்னாள் சேர்மன் கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.