உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் ஆய்வு

வேளாண் மாணவிகள் ஆய்வு

சேத்தியாத்தோப்பு : அழிச்சிக்குடியில் கத்திரி தோட்டத்தில் பந்தல் அமைத்து புடலங்காய் பயிரிட்டு வணிகம் ஈட்டும் இயற்கை சாகுபடியை வேளாண் மாணவிகள் பார்வையிட்டனர்.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அழிச்சிக்குடி கிராமத்தில் அன்பரசன் என்பவரின் நிலத்தில் கத்திரி செடி வைத்து அதில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, வீனா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி