மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
சிதம்பரம்,; சிதம்பரத்தில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகு மாறன், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில், ஓட்டுச் சாவடிக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளில் 10,000 புதிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 20௨6 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வர நாம் உழைக்க வேண்டும் என்றார்.
25-Dec-2024