அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கடலுார் : நெய்வேலியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அ.தி.மு.க., சார்பில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுதும் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.கடலுார் வருகை தரும் அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை பேசுகையில், '2026 சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணிக்கு வெற்றியை பெற்று தரும் வகையில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' எனும் உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். கடலுார் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நெய்வேலியில் வரும் 12ம் தேதியும், குறிஞ்சிப்பாடியில் 14ம் தேதியும் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு வருகிறார். சிறப்பான வரவேற்பு அளிக்க திரளாக பங்கேற்க வேண்டும்' என்றார்.மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர்கள் சிவசுப்ரமணியன், பக்தரட்சகன், மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட ஜெ., பேரவைசெயலாளர் ராஜசேகர், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.