மேலும் செய்திகள்
காளியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
24-Apr-2025
விருத்தாசலம்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது என, ஜெ., பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: அ.திமு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பிறந்த நாள் விழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் நாளை 10ம் தேதி அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. கடலுார் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், காலை 9:00 மணிக்கு திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில், 10:00 மணிக்கு புவனகிரி அங்காள பரமேஸ்வரி கோவில், 11:00 மணிக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார்.
24-Apr-2025