உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி தர்பூசணி வழங்கல்

அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி தர்பூசணி வழங்கல்

கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க.,வழக்கறிஞர் அணி சார்பில், பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் வண்ணாரப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களுக்கு கோடை வெயிலையொட்டி தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கறிஞர் அணி நிர்வாகி அஸ்வின் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இரண்டு டன் தர்பூசணிகள் வழங்கினார். நிர்வாகிகள் வெற்றிச்செல்வன், அருள்குமார், வெங்கட், வழக்கறிஞர்கள் சதீஷ், சூர்யா, ஆகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ