முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் கடலுாரில் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
கடலுார் : கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட செயலாளர் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் கடலுார் மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ஆர்.. மன்ற துணை செயலாளர் சுப்ரமணி, மருத்துவரணி சீனிவாசராஜா, மீனவரணி தங்கமணி, ஒன்றிய குழு தலைவர் பக்கிரி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், இளைஞரணி திரு, இலக்கிய அணி ஏழுமலை, மீனவரணி குப்புராஜ், கலைப்பிரிவு மணிமாறன், ஓட்டுனர் அணி சுந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கடலுார் தெற்கு ஒன்றியம் சார்பில், பாதிரிக்குப்பம் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்க, ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.