உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் பழனிசாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு

பண்ருட்டியில் பழனிசாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு

பண்ருட்டி : பண்ருட்டியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நேற்று பண்ருட்டி தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். இவருக்கு, பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., சார்பில் அண்ணாகிராமம், பண்ருட்டி யூனியன் அலுவலகம், பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மாவட்ட செயலாளர் சம்பத் சார்பிலும், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாபன்னீர்செல்வம் தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் நாகபூஷணம், சிவா, தமிழ்செல்வன், ராமசாமி, நகர செயலாளர் மோகன், மாவட்ட மாணவரணி கலையரசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை