உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., வார்டு செயலாளர் மாயம்

அ.தி.மு.க., வார்டு செயலாளர் மாயம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க., வார்டு செயலாளர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லிக்குப்பம், தமிழ்குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 65; அ.தி.மு.க., பிரமுகர். 10வது வார்டு செயலாளராக உள்ளார். மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி பூக்கடைக்கு வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ