அ.தி.மு.க.,வில் விருப்ப மனு திட்டக்குடி தொகுதி நிர்வாகிகள் குஷி
தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசின் பதவிக்காலம் வரும் 2026, மே., 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தங்களின் கூட்டணி கட்சிகளை மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவிடாமல் தக்க வைத்து வருகின்றனர். காங்., அ.ம.மு.க., சார்பில் விருப்ப மனு பெற்று முடிந்தது. தொடர்ந்து அ.தி.மு.க., சார்பில் கடந்த, 15ம் தேதி விருப்பமனு துவங்கியது. வரும், 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் விருப்பமனு பெற்று கொடுத்து வருகின்றனர். அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடைகோடி தொகுதியான திட்டக்குடி (தனி) தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளும் விருப்பமனு பெற்று, தலைமை அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர். இதனால் விருப்பமனு பெற்றவர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் பொதுமக்களை சந்திப்பதில் குஷியாக உள்ளனர்.