உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., எச்சரிக்கையால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

அ.தி.மு.க., எச்சரிக்கையால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பம் : அ.தி.மு.க.,வின் எச்சரிக்கையால் நெல்லிக்குப்பம் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லிக்குப்பம் ஆலை ரோடு சந்திப்பில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ.,வால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலையை சுற்றி தடுப்பு கம்பி வேலிகள் அமைத்துள்ளனர்.இதை சாதகமாக பயன்படுத்தி அதன் மீது விளம்பர போர்டுகள் வைக்கின்றனர். இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வாடகை மீது ஜி.எஸ்.டி.,வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி அண்ணாதுரை சிலையை மறைத்து போர்டு வைத்தனர்.இதை பார்த்த அ.தி.மு.க., நகர செயலாளர் காசிநாதன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் பஞ்சாபகேசன் ஆகியோர் போலீசில் அளித்த புகாரில் அண்ணாதுரை சிலையை மறைத்து வைத்துள்ள போர்டை உடனடியாக அகற்றாவிட்டால் அனைத்து கடைகளையும் மறைத்து போர்டுகள் வைப்போம்.போர்டு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.போலீசார் அறிவுறுத்தலின்பேரில் வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனடியாக போர்டை அகற்றினர்.இச்சம்பவத்தால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி