எருமனுார் கிராமத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் சவுமியா வீரமணி தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர், விருத்தாசலம் மருத்துமனை மருத்துவ அலுவலர் சாமிநாதன், மாத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஜயாவதி முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் செல்லதுரை வரவேற்றார்.காசநோய் மேற்பார்வையாளர் அப்பாதுரை, கிராம சுகாதார செவிலியர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆய்வக நுட்புனர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், கிராம மக்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. மேலும், எய்ட்ஸ் குறித்து கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் செல்வமணி நன்றி கூறினார்.