மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
30-Aug-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் உள்ள அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறையீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் 28ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று கும்பாபிேஷத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:45 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பர மாச்சாரிய சுவாமிகள், விஷ்ணுபிரசாத் எம்.பி., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், தி.மு.க., ஒன்றிய செயலர் வேல்முருகன் மற்றும் இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள், கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
30-Aug-2025