மேலும் செய்திகள்
மாநில கராத்தே போட்டி: காஞ்சிக்கு 35 பதக்கங்கள்
10-Dec-2024
கடலுார்; நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த 1500 பேர் பங்கேற்றனர். இதில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த குறவஞ்சி சிலம்பம் சங்கம் சார்பில் பங்கேற்ற 6 பேர் தங்கப்பதக்கம், 16 பேர் வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை குறவஞ்சி சிலம்பம் சங்க தலைவர் தொழிலதிபர் ராமநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.அப்போது, தொழிலதிபர் நந்தகோபாலகிருஷ்ணன், தமிழ்செல்வன், கராத்தே ஆறுமுகம், தேசிய விளையாட்டு வீரர் சுமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
10-Dec-2024