உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

அகில இந்திய வாலிபால் போட்டி; பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

கடலுார்; அகில இந்திய வாலிபால் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுவிழா நடந்தது.உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான, 14வயதுக்குட்பட்டோருக்கான வாலிபால் போட்டி, கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது. கடலுாரைச் சேர்ந்த செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, ஹாசினி ஆகியோர், தமிழக அணி சார்பில் இப்போட்டியில் பங்கேற்று வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். வெற்றிபெற்ற மாணவிகள் நேற்றுமுன்தினம் சொந்தஊருக்கு திரும்பிய நிலையில், பள்ளி நிர்வாகம் மற்றும் மெட்ரோ நண்பர்கள் கைப்பந்து கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டுவிழாவில் மாணவிகளை, பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ