மாற்று கட்சியினர் அ.தி.மு.க., வில் ஐக்கியம்
சிதம்பரம்: சிதம்பரத்தில், மாற்று கட்சியினர், 30க்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ., பாண்டியன் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். சிதம்பரத்தில், அ.தி.மு.க., வில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., பாண்டியன் முன்னிலையில், தி.மு.க., மற்றும் மாற்று கட்சியினர், அக்கட்சியில் இணைந்தனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குப்பட்ட சிலம்பிமங்கலம் ஊராட்சியைசேர்ந்த சுதாகர் தலைமையில் மோகன், அருள், ஆறுமுகம், நடராஜ்,இறையன்பு, ராஜேஷ், ஜெயசங்கர், ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, சிவசிந்தா உட்பட 30க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில்இணைந்தனர்.நிகழ்வில், மேற்குஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், கிளை கழக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்