உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

 மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

கிள்ளை: கிள்ளையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பொன்னந்திட்டு பகுதியில் அ.தி.மு.க.,-த.வெ.க., நா.த.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 பேர், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் முன்னிலையில், தி.மு.க., வில் இணைந்தனர். நகர அவை தலைவர் குட்டியாண்டிசாமி, துணை செயலாளர் சத்துருக்கன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சாமிமலை, வார்டு செயலாளர்கள் மலையரசன், அஷ்ரப் அலி, கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ