மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளை சேர்ந்த மாற்றுக் கட்சி பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.விருத்தாசலத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அதில், த.வெ.க.,- வி.சி., - மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி அ.தி.முக.,வில் இணைந்தனர். திட்டக்குடி தொகுதி நல்லுார் ஒன்றியம் நந்தப்பாடி, வெண்கரும்பூர் கிராமங்களில் இருந்து தி.மு.க.,- பா.ம.க.,-பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.நகர செயலாளர் சந்திரகுமார், மாநில பேரவை துணை செயலாளர் அருளழகன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து, தம்பிதுரை, நகர துணை செயலாளர் மணிவண்ணன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் மனோகரன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன், செல்வகணபதி, வட்ட செயலாளர்கள் செந்தில், திலீப், மணி, வழக்கறிஞர் வினோத், வீரமணி உடனிருந்தனர்.
18-Jan-2025